அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 7 மார்ச், 2011

யாழ். குடாநாட்டில் 9 குடும்பங்கள் மட்டுமே மீள்குடியேற்றப்படவுள்ளன:ஜகத் ஜயசூரிய

யாழ். குடாநாட்டில் மீள்குடியேற்றத்துக்காக இன்னும் ஒன்பது குடும்பங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் சுமார் 33பேர் கொண்ட இந்த குடும்பத்தினர் இன்னும் ஓரிரு வாரங்களில் மீள்குடியேற்றப்படுவர் என்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, குடாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடிகள் யாவும் படையினரால் முற்றாக அகற்றப்பட்டுவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டை அடுத்து ஊடகவியலாளர்களுடன் சில கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட போதே இராணுவ தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். (M.M)

0 கருத்துகள்:

BATTICALOA SONG