அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 2 மார்ச், 2011

ஜே 61 ஜே 91ம் கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் மீள் குடியேற்றம்.

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட ஜே 61 கிராம சேவையாளர் பிரிவின் கீழுள்ள துண்டி மகேந்திரபுரம் எழிலூர் புனிதபுரம் மற்றும் உதயபுரம் போன்ற பகுதிகளிலும் ஜே 91 கிராம சேவையாளர் பிரிவின் கீழுள்ள கிழக்கு அரியாலை பூம்புகார் பகுயிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 3ம் திகதி வியாழக்கிழமை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முன்னிலையில் நடைபெறவுள்ளது.
இப்பகுதிகளை சார்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் தொடர்ந்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இணங்க அமைச்சர் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இம் மீள்குடியேற்றங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மீள்குடியேற்றம் செய்யப்படாதிருந்த ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் அமைச்சர் அவர்களது நடவடிக்கைகள் காரணமாக ஏற்கனவே மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ள நிலையிலேயே எதிர்வரும் வியாழக்கிழமை மேற்படி மீள்குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன.



0 கருத்துகள்:

BATTICALOA SONG