அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 15 மார்ச், 2011

கொழும்பு விடுதிகளில் கைதான 48 பேருக்கு 27 ஆம் திகதிவரை விளக்கமறியல்

கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 தமிழர்களை மார்ச் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஆண்கள், பெண்கள், சிறார்கள் உட்பட 52 பேரை கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.
கொழும்பிலும் நீர்கொழும்பிலுமுள்ள விடுதிகளிலிருந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கிடைத்த தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றதாகவும் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருக்கிறதா அல்லது சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றார்களா என அறிவதற்காக விசாரித்து வருவதாகவும் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேக நபர்ககள் பல்வேறு தேவைகளுக்காக கொழும்பிற்கு வந்ததாக சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் வி.எஸ். நிரஞ்சன், மொஹமட் நஸார், ஏ.சி.எம். இஸ்மாயில் ஆகியோர் நீதிமன்றில் கூறினார்.
ஒவ்வொரு பிரஜையும் எங்கும் வசிக்கலாம் என கூறப்பட்ட போதிலும் அப்பாவி மக்களை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பனாலும் தமிழர்கள் என்பதனாலும் குற்றப்புலனாய்வு பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் சந்தேக நபர்களின் வழக்குரைஞர்கள் கூறினார்.
10 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் எப்படி எல்.ரி.ரி.ஈ. நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருக்க முடியும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அதன்பின் சிறார்கள் நால்வரை விடுதலை செய்த நீதவான் ஏனையோரை மார்ச் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG