அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 25 மார்ச், 2011

13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : சந்தேக நபர் கைது

13  வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படுகின்ற 19 வயது இளைஞர் ஒருவரை வட்டவளை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

வட்டவளை பிரதேச தோட்டமொன்றைச் சேர்ந்த சிறுமி ஒருவரையே இந்தச் சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக 24 ஆம் திகதி வட்டவளை பொலிஸாருக்குக் கிடைத்த முறைப் பாட்டினைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியை வட்டவளை பொலிஸார் நீதிவான் முன்னிலையில் அஜர்படுத்தியதை அடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அச்சிறுமி தற்போது வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG