அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 6 மார்ச், 2011

1,202 வீடுகளை உரியவர்களிடம் கையளிக்குமாறு ஜே.வி.பி. வலியுறுத்து

டபகுதியில் யுத்த நடவடிக்கைகளின்போது கைப்பற்றப்பட்டுள்ள 1,202 வீடுகளையும் வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு அரசாங்கத்திடம் மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
'வீட்டு உரிமையாளர்களிடம் மேற்படி வீடுகளை அரசாங்கம் கையளிக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தம் முடிவடைந்து 20 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அங்கு முழுமையானளவில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில், அங்கு வீட்டுத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உரியமுறையில் மீள்குடியேற்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.
ஏற்கெனவே மீள்குடியேற்றப்பட்ட மக்கள் வாழ்வாதாரமின்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இம்மக்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை பெற்றுக்கொள்ளும் வரையில் சிறியளவில் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.
இதேவேளை, மட்டக்களப்பில் மீள்குடியேற்றப்பட்ட 1,211 குடும்பங்களின் காணிகள் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதால் இம்மக்கள் மீளவும் திருகோணமலை நலன்புரி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
பட்டித்திடல் பகுதியில் 223 குடும்பங்களும் மனாச்சேனையில் 70 குடும்பங்களும் கிளிவெட்டியில் 575 குடும்பங்களும் கட்டைப்பறிச்சானில் 343 குடும்பங்களும் இன்னமும் இடம்பெயர்ந்த நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG