அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 8 மார்ச், 2011

10 பாலியல் தொழிலாளிகள் கைது

வென்னப்புவ, தும்மலதெனிய என்னும் பகுதியில் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவு அதிகாரியொருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விடுதியில் சோதனை மேற்கொண்டபோது பாலியல்த் தொழிலில் ஈடுபடும் 10 பெண்களும் இரு இடைத்தரகர்களும் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவின் குறித்த அதிகாரி பொல்காவெல பகுதிக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் சுகயீன விடுமுறையில் நின்றுகொண்டு தனது கடமையை பொறுப்பேற்கத் தவறியுள்ளார்.
வாடிக்கையாளர்கள் போன்று நடித்த இரகசியப் பொலிஸாரை பயன்படுத்தியே இவர்களை வலன பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதற்கான ஆணையை மாரவில நீதிபதியிடமிருந்து பொலிஸார் பெற்றிருந்தனர்.
அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் குறித்த அதிகாரியை கைதுசெய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG