அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 16 பிப்ரவரி, 2011

முகாம்களில் வாக்குச்சாவடிகளை அமைக்க நடவடிக்கை தேவை; ஆணையாளரிடம் மு.கா.கோரிக்கை

புத்தளம் உட்பட முகாம்களில் தங்கியுள்ளவர்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடிகளை குறித்த முகாம்களில் அமைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையாளரிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் எம்.பி.யுமான ஹசன் அலி கோரியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

வட மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் வாக்காளர்கள் தமது வாக்களிக்கும் சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்துவதற்குரிய வழிவகைகளை இலகுவாக்கித் தரவேண்டியது தேர்தல் ஆணையாளரின் தலையாய கடமையாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மெரிடைம்பற்று பிரதேசசபை மற்றும் கிளிநோச்சி மாவட்டத்திலுள்ள பூநகரி சபை போன்ற இடங்களைச் சேர்ந்த முஸ்லிம் வாக்காளர்கள் மிகவும் இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதே போன்று மன்னார் மாவட்டத்திலுள்ள ஒரு சில பிரதேச சபைகளைச் சேர்ந்த வாக்காளர்களும் தமது வாக்குரிமையை பாவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG