அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 28 பிப்ரவரி, 2011

கிழக்கு மாகாண சபையை கூட்டமைப்பு கைப்பற்றினால் அரசியலிலிருந்து விலகுவேன்: சிவனேசதுரை சந்திரகாந்தன்

கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனித்து போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றினால் நான் அரசியலிலிருந்து விலகுவேன்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.

கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஒரு போதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் கைப்பற்ற முடியாது எனவும் அவர் தமிழ்மிரர் இணையத்தளத்திடம் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும் அரசாங்கத்துடன் இணைந்தா அல்லது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியிலா போட்டியிடுவீர்கள் என தமிழ்மிரர் இணையத்தளம் வினவியதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.
கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டது. அதற்கு பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் எதிர்வரும் 2013 மே மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் பொலிஸ், காணி, போக்குவரத்து, வீடமைப்பு, சுற்றுலா உட்பட 20 நியதிச்சட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG