அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

எக்னலிகொடவின் மனைவியின் கடிதம் கிடைத்தது : ஐ.நா.

காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியினால் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பப்பட்ட கடிதம் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக ஐ.நா. அலுவலகம் அறிவித்துள்ளது.
திருமதி சந்த்யா எகனலிகொடவினால் கையளிக்கப்பட்ட மஜஜர் குறித்து தமக்குத் தெரியாது என நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நேசிர்க்கி முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொழும்பிலுள்ள ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி நீல் புஹ்னேவுக்கு இம்மகஜர் கிடைத்திருப்பதாக ஐ.நா.வின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை,
தனது கடிததத்துக்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திலிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் ஐ.நா.வின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் திருமதி எக்னலிகொட தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG