அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 23 பிப்ரவரி, 2011

யாழ்.நகரப் பகுதிக்கு அமைச்சர் விஜயம்

பா
ரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று யாழ்.நகரப் பகுதியின் பல்வேறு இடங்களுக்கும் சென்றதுடன் வர்த்தகர்களுடனும் கலந்துரையாடியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மின்சார நிலைய வீதியிலுள்ள யாழ்.போதனா மருத்துவ மனைக்கு அண்மையாகவுள்ள பொதுக்கிணறு பொது மலசல கூடங்களைப் பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவற்றின் சுத்தம் சுகாதாரம் தொடர்பில் உரிய தரப்பினர் அக்கறை செலுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
இதன அடுத்து நவீன சந்தை சந்தை உட்புறம் சிறப்பு அங்காடிப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் வர்த்தகர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்;கொண்டு அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் சந்தை உட்புறப் பகுதியில் ஒன்று கூடிய வர்த்தக சமூகத்தினரிடம் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வர்த்தகர்களின் நலன்கள், வசதிகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் துவிச்சக்கர வண்டிகள் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் தரிப்பிடங்கள் தொடர்பில் வர்த்தக சமூகத்தினர் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும் ஏனைய தேவைகள் தொடர்பாகவும் நாளை யாழ்.மாநகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் முடிவெடுக்கப்படுமெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.





















0 கருத்துகள்:

BATTICALOA SONG