அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 28 ஜனவரி, 2011

நீதி மற்றும் சுதந்திரமான தேர்தலுக்கு சகல கட்சிகளும் அர்ப்பணிக்கவும்: பிரதமர்

ள்ளூராட்சி மன்ற தேர்தலை நீதியானதும் சுதந்திரமானதுமான முறையில் நடத்துவதற்கு சகல கட்சிகளும் அர்ப்பணிக்கவேண்டும் என பிரதமர் தி.மு. ஜயரட்ன தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்திற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததன் பின்னர் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல்கள் ஆணையாளருக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும்,தேர்தலில் போட்டியிடும் இதர கட்சிகளும் அவ்வாறே செயற்படவேண்டும். மக்கள் ஜனநாயக ரீதியில் வாக்குகளை அளிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பது சகல அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும்.
அதனடிப்படையில் எவ்விதமான வன்முறைகளும் இன்றி தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்காக சகல கட்சிகள் , வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் செயற்படவேண்டும். தேர்தலில் விசேட வெற்றியை பெற்றுக்கொள்வது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சவாலில்லை.
ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி இரண்டாக பிளவுபட்டுள்ளன. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்கள் பிரிந்திருக்கின்றனர். ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர்கள் சிலர் தங்களுடைய சுவரொட்டியில் எங்களுடைய தலைவர் சஜித் என்றும் இன்னும் சிலர் எங்கள் தலைவர் ரணில் என்றும் பொறித்துள்ளனர். இவ்வாறான நிலையிலேயே கிராமங்களுக்கு சேவையாற்றவேண்டியவர்களை நாம் தெரிவுசெய்துள்ளோம்.
மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கை முன்னெடுத்து செல்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு எதிர்கால உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரபலமான முச்சந்தியாகும் அந்தவகையில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு பலமான குழுவை நாட்டிற்கு இனங்கண்டுகொடுக்கவேண்டும் என்றார். 

0 கருத்துகள்:

BATTICALOA SONG