அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 28 ஜனவரி, 2011

பொலிஸ் மா அதிபரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிப்பு

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவை பெப்ரவரி 11ஆம் திகதி உயர் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பகோரி நீதிமன்ற பதிவாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றை அவமதித்தாக பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.ஜயவர்த்தன செய்த முறைப்பாட்டையடுத்தே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தான் முதலில் கட்டாய லீவில் அனுப்பட்டதாகவும், பின் அது வாபஸ் பெறப்பட்டது. தற்போது தன்னை பொலிஸ் மா அதிபர் தற்காலிக வேலை நீக்கம் செய்துள்ளதாக ஜயவர்த்தன நீதிமன்றில் முறையிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தன்னை வேலையிலிருக்க இடைநிறுத்தம் செய்தமை, முன்னர் தன்னை கட்டாய லீவில் அனுப்பியதை விட கடுமையானது என கூறியுள்ளார்.
தேர்தல் காலத்தில் தான் பாரபட்சமாக நடந்துகொண்டதாக குற்றஞசாட்டி தன்னை கட்டாய லீவில் அனுப்பியதாக .ஜயவர்த்தன தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG