அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 17 ஜனவரி, 2011

விலைமாதருடன் இத்தாலிய பிரதமருக்குத் தொடர்பா? அதிரவைக்கும் புதிய சர்ச்சை

த்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி விலை மாதரை தங்க வைப்பதற்காக பல வீடுகளை மிலான் நகரில் வைத்துள்ளதாக புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

அவரது வைபவங்களில் துகிலுரி நடனமாடும் பெண்கள் தங்கவே இவற்றை அவர் பேணி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே அவர் 17 வயதான மொராக்கோ நாட்டைச் சேர்ந்த கரீமா என்ற பெண்ணுடன் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள செய்தியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலிய நாட்டு சட்டதிட்டங்களின் பிரகாரம் 18 வயதிற்கு குறைவான பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
கரீமா மஹ்ரோப் எனப்படும் நடன மாது கடந்த வருடம் மே மாதம் திருட்டுக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டபோது அவரை சில்வியோ பெர்லுஸ்கொனி தலையிட்டு விடுதலை செய்ய முயற்சி செய்தார் எனவும் பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டது.
எனினும் இப்பாலியல் குற்றச்சாட்டுக்களை இருவரும் மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG