ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அர்ஜுன ரணதுங்கவை கைது செய்வதற்கான பிடியாணையை காலி பிரதம நீதவான் தாமர தென்னகோன் இன்று உத்தரவிட்டுள்ளார்
.இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய சிறைவைக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் உட்பட மேலும் சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அர்ஜூன ரணதுங்க மன்றில் ஆஜராகியிருக்கவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக நீதவான் பிடியாணை பிறப்பித்தார்.
இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினரான அர்ஜூன ரணதுங்க தற்போது வெளிநாடு சென்றிருப்பதாலேயே அவர் மன்றில் இன்று சமூகமளிக்கவில்லை என்று அவர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 17 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக