அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 27 ஜனவரி, 2011

யாழ்.நூலகம் மற்றும் சுப்பிரமணிய பூங்காவிற்கு அமைச்சர் திடீர் விஜயம்

யாழ்.நூல் நிலையத்திற்கும் சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கும் இன்று திடீர் விஜயம் மேற்கொண்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப் பகுதிகைள நேரில் பார்வையிட்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
முன்பதாக யாழ்.நூல்நிலையத்தில் புதிதாக நியமனம் பெற்றவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள் பணியாளர்கள் தங்களது பணிகளை பயனாளிகளின் தேவைகருதி சேவை மனப்பான்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அத்துடன் பணியாளர்கள் எல்லோரும் நேர்மையுடனும் புரிந்துணர்வுடனும் கடமையாற்ற வேண்டுமெனவும் சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கை முதன்மையாகக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து நூலக வளாகத்தைப் பார்வையிட்ட அமைச்சர் அவர்கள் வளாகம் எப்போதும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமென்றும் அதற்கு சகல தரப்பினரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுமென்றும் வளாகத்தினுள் உள்ள சரஸ்வதி சிலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்றும் ஏனைய இடங்களும் சுத்தமாக இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்குச் சென்ற அமைச்சது அவர்கள் அதன் சுத்தம் தொடர்பில் ஆராய்ந்ததுடன் அதற்கு மேலும் அழகு சேர்ப்பது குறித்தும் பூங்கா வளாகத்தில் புதிய வகையிலான பூ மரங்களை நாட்டுவது தொடர்பாகவும் ஆராய்ந்து கொண்டார்.
அத்துடன் பூங்காவின் பிரதான வாயிலூடாகச் சென்ற அமைச்சர் அவர்கள் துரையப்பா விளையாட்டரங்கினையும் ஆராய்ந்தார்.
இதன் போது யாழ்.மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா யாழ்.நூல் நிலைய நூலகர் தனபாலசிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.



















0 கருத்துகள்:

BATTICALOA SONG