அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 24 ஜனவரி, 2011

அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் யாழ். றக்காவீதி மைதானத்தில் இன்று பிரமாண்டமான புத்தெழுச்சி இசை விழா.

யா
ழ்.சுண்டிற்குளி றக்கா வீதியிலுள்ள பொது மைதானத்தை அண்மித்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை அடுத்து இன்றையதினம் ஓர் புத்தூக்க இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கடந்த பத்தொன்பதாம் திகதி அப்பகுதி மக்களின் வேண்டுகோளின் பேரில் அங்கு விஜயம் செய்த அமைச்சரவர்களிடம் தமது தேவைகள் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை மகஜர்களாகவும் நேரடியாகவும் அம்மக்கள் முன்வைத்தார்கள். குறிப்பாக கழிவுநீர் வடிகாலமைப்பினை ஏற்படுத்துதல் மின்சார வசதி அற்றவர்களுக்கு மின்சார இணைப்பு குப்பை அகற்றுதல் தெரு விளக்கு போடுதல் இறைச்சி மீன் கடைகளின் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு என்பன குறித்து கோரிக்கை அங்கு முன்வைக்கப்பட்டன.

மேலும் அப்பகுதி இளைஞர்கள் தினமும் மைதானத்தில் விளையாடும் நிலையில் அவர்கள் பாதிக்கப்படாதவாறு கரப்பந்தாட்ட மைதானத்தை அமைத்தல் றக்காவீதியையும் தண்டவாளப் பகுதியையும் இணைக்கும் வீதிக்கு சிறி ஞான வைரவர் வீதி எனப் பெயரிடுதல் போன்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டன. மேற்படி கோரிக்கைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதியளித்தார்.

இதன்பிரகாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உடனடி பணிப்பின் பிரகாரம் துரிதமாக மேற்கண்ட புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை அடுத்து அப்பகுதி மக்களின் வேண்டுகோளின் பேரில் அவர்களுக்கு புத்தூக்கம் அளிக்கும் வகையில் இசை நிகழ்ச்சி ஒன்று யாழ்.மாநகர சபையின் ஒத்துழைப்புடன் இன்றையதினம்; ஞாயிற்றுக்கிழமை நடாத்த நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சரவர்கள் பணிப்புரை வழங்கியதை அடுத்து மேற்படி புத்தூக்க இசைநிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்றது. ஈழத்து சௌந்தர்ராஜன் என அமைக்கப்படுபவரும் ஜனாதிபதியின் கையினால் விருதும் பாராட்டும் பெற்றவருமான அருள்ஜோதியின் இசைநிலா இசைக்குழுவினரே மேற்படி இசை நிகழ்வினை சிறப்பாக நடாத்தினார்கள். இசை நிகழ்ச்சி நடைபெற்றவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிவிப்பு வெளியானபோதெல்லாம் விண்ணதிர கரகோஷம் மைதானத்தில் எழுந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல தொலைபேசி மூலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி ஒலிபெருக்கி ஊடாக வெளிவந்தபோது அங்கு திரண்டிருந்தோர் மகிழச்சி ஆரவாரம்செய்து தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ றீகன் யாழ். பொலிஸ் நிலைய பரிசோதகர் குணரத்தின சனசமூகநிலையத் தலைவர் சுதர்சன் ஜோய் மாதர் சங்கத் தலைவி செல்வராணி யாழ்.மாநகர சபைப் பொறியியலாளர் ஹென்ஸ்டன் யாழ்.கரப்பந்தாட்ட சங்க நிர்வாகிகள் உட்பட அப்பகுதி வாழ் மக்களும் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த ஐம்பது வருடங்களாக இளஞ்சிங்கம் சனசமூக நிலையம் என்ற பெயரில் இயங்கிய நிலையில் கடந்த வருடங்களில் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக இளங்கதிர் எனப் பெயர் மாற்றப்பட்ட அந்நிலையமானது இன்றைய தினம் அனைத்து குடியிருப்பாளர்களினதும் சம்மதத்துடன் மீண்டும் இளஞ்சிங்கம் சனசமூக நிலையம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றையதினம் மீண்டும் திறந்துவைக்கப்பட்டமை முக்கிய விடயமாகும்.











0 கருத்துகள்:

BATTICALOA SONG