அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 22 ஜனவரி, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம்


மிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் கூட்டம் வவுனியா புகையிரதநிலைய வீதி வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள புளொட் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழரசுக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்;த்தன், புளொட் மத்தியகுழு உறுப்பினர்களான சிவனேசன் பவான், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜீ.ரி.லிங்கநாதன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான வேட்பாளர் நியமனம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதில் எந்தவொரு கட்சியையும் சார்ந்தவர்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்காமல், மக்கள் மத்தியில் செல்வாக்கு உடையவர்களை வேட்பாளர்களாக நியமிப்பது என்றும், அதன் தேர்வுகளை இன்றுமுதல் ஆரம்பிப்பதென்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG