அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 18 ஜனவரி, 2011

கிழக்கு மாகாண மக்களுக்கு அவுஸ்திரேலிய தமிழ் தொண்டு நிறுவனங்கள் உதவி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு அவுஸ்திரேலிய தமிழ் தொண்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்க தீர்மாணித்துள்ளது
.
அவுஸ்திரேலியாவில் இயங்கும் தமிழ் தொண்டு நிறுவனங்களான அவுஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகம், அவுஸ்திரேலிய மருத்துவ நிதியம் ஆகியன கிழக்கு மக்களிற்கான உதவிப் பணியில் தம்மையும் இணைத்துக் கொண்டுள்ளன.
இந்த உதவித் திட்டங்கள் சம்பந்தமாக அந்நிறுவனங்களின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வமான ஊடக அறிக்கையிலையே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

போரினாலும் சுனாமியாலும் பெரும் அழிவுகளை சந்தித்த இலங்கையின் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் இப்போது வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களால் உதவிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் அவுஸ்திரேலிய தமிழ் தொண்டு நிறுவனங்கள் கிழக்கு மாகாண மக்களுக்கு அடிப்படை, அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், இலங்கையில் செயற்படும் தர்ம ஸ்தாபனங்களின் ஊடாக, 16 இலட்சம் ரூபாவை முதற்கட்டமாக அனுப்பி வைத்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG