அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 26 ஜனவரி, 2011

பெண் போராளியை புனர்வாழ்வுக்கு அனுப்பாமைக்கு காரணம் காட்டுமாறு நீதிமன்றம் பணிப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளியொருவரை புனர்வாழ்வுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் பணித்துள்ள போதிலும் அதனைச் செய்யத் தவறிய சிறைச்சாலையின் பெண்கள் பிரிவு அத்தியட்சகருக்கு அவரின் செயலின்மைக்கு காரணம் காட்டுமாறு கொழும்பு நீதிவான் இன்று பணித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவராக இருந்தவர் என குற்றம் சாட்டப்பட்ட மேற்படி பெண்ணை, விசாரணையின் பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நீதிவான் பணித்திருந்தார்.
ஆயினும் சிறைச்சாலை அதிகாரிகள், இந்த அறிவுறுத்தலை உதாசீனம் செய்திருந்ததை நீதவான் அறிந்துகொண்டார். இதனால் சிறைச்சாலையின் பெண்கள் பிரிவு அத்தியட்சகர் ஏன் நீதிமன்றக் கட்டளையை செயற்படுத்த தவறினார் என காரணம் காட்டுமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG