அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

தி.மு.க கூட்டணியில் பா.ம.க

மிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.


புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இதை அவர் உறுதி செய்தார்.
நான்கு நாள் பயணம் ஒன்றினை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக முதல்வர் புதுடில்லி சென்றடைந்தார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவைத் தவிர காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவையும் இடம்பெறும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அணி மாறி அஇஅதிமுக வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
அந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியைத் தழுவிய பாமக அதன் பிறகு தொடர்ந்து அதிமுக கூட்டணியில் நீடிக்குமா அல்லது திமுக பக்கம் தாவுமா என்பது குறித்த கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடதுசாரி கட்சிகள், மதிமுக, மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தனது புதுடில்லிப் பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை சந்தித்து பேசும் போது, காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்படும் எனவும் கருணாநிதி மேலும் தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக்கான தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


0 கருத்துகள்:

BATTICALOA SONG