அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 27 ஜனவரி, 2011

கனிமொழி படத் தயாரிப்பில் ரூ 5 கோடியை இழந்த நடிகை சோனா

டி ஓடி சம்பாதித்த பணம் கடல்ல கரைச்ச பெருங்காயம் மாதிரி ஆகிடுச்சே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் கவர்ச்சி 'குண்டு' சோனா.

கவர்ச்சியாக நடித்தோமா கல்லாவை நிரப்பினோமா என்பதோடு நில்லாமல், படத்தயாரிப்பிலும் குதித்தார் நடிகை சோனா. தனியாக தயாரிக்காமல், சிலரை பார்ட்னராக்கி கனிமொழி என்ற படத்தை எடுத்தார்.
படுமோசமான தோல்வியைத் தழுவியது கனிமொழி. இந்தப் படத்தின் மூலம் சோனா இழந்த தொகை ரூ 5 கோடி என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்.
இப்போது சோனா 'பாக்யராஜ் 2010' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். முதல் படமே தோல்வி என்பதால், இந்தப் படத்தைத் தொடர்வதா நிறுத்திவிட்டு, அழகு நிலைய பிஸினஸில் கவனம் செலுத்துவதா என்ற குழப்பத்தில் உள்ளாராம்.
படத்தை எப்படியாவது வெளியிட்டு விடலாம் என்று அந்தப் படத்தின் இயக்குநர் நச்சரிக்க, 'முதல் பட கடனை சரிகட்ட வழி இருந்தா சொல்லு... இல்லேன்னா, பேக்கப் பண்ணு' என்றாராம் கடுப்புடன்.
இதற்கிடையே, தனது அழகு சாதனப் பொருள் விற்பனைக் கடையின் மூன்றாம் ஆண்டு விழாவை பிரமாண்டமாக நடத்தி, விட்டதைப் பிடிக்கும் முயற்சியில் உள்ளாராம் சோனா

0 கருத்துகள்:

BATTICALOA SONG