அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 26 ஜனவரி, 2011

ஆஸ்கர் விருது-2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை

ஸ்கர் விருது ஜூரம் தீவிரமாகியுள்ளது. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர், 2 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை அவர் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளி சாதனை படைத்தார் ரஹ்மான். அவர் மட்டுமல்லாமல், குல்ஸார், ரசூல் பூக்குட்டி ஆகியோருக்கும் விருதுகள் கிடைத்தன.
இந்த நிலையில், ரஹ்மான் இசையமைப்பில், டேனி பாயில் இயக்கியுள்ள 127 ஹவர்ஸ் திரைப்படம் பல்வேறு ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ரஹ்மானின் பெயர் மட்டும் 2 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த ஒரிஜினல் பாடல் (இஃப் ஐ ரைஸ்) ஆகிய இரு பிரிவுகளில் ரஹ்மானின் பெயர் பரிந்துரையாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளுவாரா ரஹ்மான் என்ற எதிர்பார்ப்பு பெரிதாகியுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில், அதிகபட்சமாக தி கிங்க்ஸ் ஸ்பீச் படம் மொத்தம் 12 பிரிவுகளில் பரிந்துரையைப் பெற்றுள்ளது. ட்ரூ கிப்ட் படம் 10 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.
83வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது

0 கருத்துகள்:

BATTICALOA SONG