அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 28 ஜனவரி, 2011

மெக்ஸிகோவில் இலங்கையர் உட்பட 219 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது

மெக்ஸிக்கோவில் சிப்பாஸ் என்னும் தென்மாநிலத்தில் 6 இலங்கையர்கள் உட்பட 219 சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை மெக்ஸிக்கோ அதிகாரிகள் பிடித்துள்ளதாக எல் யூனிவேசல் பத்திரிகை நேற்று வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

'களவு போனதாக அறிவிக்கப்பட்ட பின் இணைப்பு வாகனத்தில் மனிதாபிமானமற்ற நிலையில் மறைவாக பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே இவர்கள் அகப்பட்டனர்.
இந்த குழுவில் 177 ஆண்களும் 33 பெண்களும் 09 சிறுவர்களும் இருந்தனர். இவர்களில் 169 பேர் கௌதமாலாவையும் 22 பேர் எல் சல்வடோரையும் 18 பேர் ஹொண்டுராசையும் 6 பேர் இலங்கையையும் 4 பேர் நேபாளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு வைத்திய, உளவியல் சிகிச்சைகளுடன் சட்ட ஆலோசனையும் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை களவாக கொண்டு சென்ற இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத குடியேற்றவாசிகள் யாவரும் சேர்ந்து தம்மை களவாக மெக்ஸிக்கோவுக்கு கொண்டு செல்வதற்கு 7000.00 அமெரிக்க டொலர் வரை செலுத்தியதாக தெரியவருகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG