லண்டனில் இடம்பெற்ற தமிழீழ விடுதலை புலி ஆதரவாளர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன பங்குபற்றினார் என்று சில அமைச்சர்கள் கூறியதை நவ சமசமாஜ கட்சி இன்று உறுதியாக மறுத்துள்ளது.
கட்சியின் பொது செயலாளரான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன அந்த சமயம் லண்டனிலிருந்தாலும் அவர் எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என அக்கட்சி கூறியது.
எமது கட்சியின் லண்டன் கிளை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன லண்டன் சென்றார். அவர் வேறு தமிழ் நிறுவனங்களின் கூட்டங்களில் கலந்துகொண்டார் என நவ சமசமாஜ கட்சியின் ஊடக செயலாளர் நடராஜா ஜெனகன் தெரிவித்தார்.
கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன விரைவில் நாடு திரும்பவுள்ளார். அவருடன் நேரடியாக பேசிய பின் மேலதிக விபரங்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 4 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக