அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 2 டிசம்பர், 2010

ஒக்ஸ்போர்ட் யூனியன் உரை இரத்து ; ஜனாதிபதி மஹிந்த கவலை

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றவிருந்த உரையை ஒக்ஸ்போர்ட் யூனியன் பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்துச் செய்தமை குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் அழுத்தம் காரணமாக ஒக்ஸ்போர்ட் யூனியன் இந்த உரையை இரத்துச் செய்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க கூறியதாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
' இலங்கையின் எதிர்காலம் தொடர்பான எனது எண்ணங்களை வெளியிடுவதற்கான இடமொன்றை பிரிட்டனிலோ, அல்லது வேறு எங்குமோ தொடர்ந்து தேடுவேன்' எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இத்தீர்மானம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை எனவும் ஒக்ஸ்போர்ட் யூனியன் இந்த இரத்து குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளதாகவும் ஒக்ஸ்ட்போர்ட் யூனியன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பேச்சாளர்களின் உரையை நடத்துவதையும் பேச்சு சுதந்திரத்தை நிலைநாட்டுவதையும் ஒக்ஸ்போர்ட் யூனியன் நீண்டகாலப் பாரம்பரியமாகக் கொண்டுள்ளது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG