அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 1 டிசம்பர், 2010

அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் குடியேற்ற பாதுகாப்பு அமைச்சு அனுமதி

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் மக்களை மீளக்குடியேற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது என மீள்குடியேற்ற பிரதிஅமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'யாழ் குடா நாட்டின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியேற்றுவதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளார். எனவே மக்கள் அங்கு கட்டம் கட்டமாக குடியேற்றப்படுவர்.
இளவாலை வடமேற்கு, வித்தகபுரம் போன்ற இடங்களில் மக்களை மீளக்குடியேற்றவிருக்கின்றோம். மயிலிட்டியானது அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ளது. இங்கு புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. விரைவில் அந்தப் பிரதேசத்தில் மக்கள் மீளக்குடியேற்றப்படுவர்" என்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG