அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 7 நவம்பர், 2010

பலாங்கொடை நகர நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை

லாங்கொடை, நகரமத்தியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையொன்றில் இன்று மாலை துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ள ஆயுததாரிகள் இருவர் குறித்த நகைக்கடையின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி அங்குள்ளவர்களை அச்சுறுத்திவிட்டு நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுதாக பொலிஸார் கூறினர்.
இன்று மாலை 6.20 மணியளவில் இடம்பெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவத்தை நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டதாகவும் இருப்பினும் ஆயுததாரிகள் துப்பாக்கி சகிதம் இருந்தமையினால் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாதிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸில் புகாரிடப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG