நாட்டை பாதுகாக்கும் பலம் ஐக்கிய தேசிய கட்சியிடமே உள்ளது. நாடாளுமன்றத்தில் திறமையான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மாத்தறையில் நேற்று முன் தினம் ஆரம்பிக்கப்பட்ட கிராம சுற்றுலா நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தைத் தெரிவித்தார்.
இதன் போது தாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தமை தொடர்பாக ரகசியத்தையும் மங்கள சமரவீர வெளியிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
"நாட்டைப் பாதுகாக்கும் பலம் ஐக்கிய தேசிய கட்சியிடமே இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் திறமையான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் உள்ளனர்.
அதேபோன்று வளங்கள் அதிகம் நிறைந்த கட்சியாகவும் அது விளங்குகின்றது. இதன் காரணமாகவே நான் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டேன். அந்த வளங்களை உரிய வகையில் பயன்படுத்தவும் நான் நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.
பலம் வாய்ந்த கட்சியை மீளமைத்து எதிர்காலத்தில் சிறந்த பொறிமுறையை உருவாக்க வேண்டும்" என்றார்.
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய பேசுகையில்,
"பயனற்ற இனவாதங்களை முறியடிப்பதற்குத் தமது கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 7 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக