அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 3 நவம்பர், 2010

தமிழ் கட்சி அரங்கம்-சம்பந்தன் சந்திப்பு

மிழ்க் கட்சிகளின் அரங்க பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை கொழும்பில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த காலம், நேரம், இடம் ஆகியவற்றை ஒதுக்கித் தருமாறு கடந்த ஜூன் மாதம் அனுப்பிய கடிதத்தின் பிரதியை தமிழ் கட்சிகளின் அரங்க பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனிடம் கையளித்தனர்.
அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடனும் நாடாளுமன்ற குழுவுடனும் கலந்துரையாடிய பின்னர் அறிவிப்பதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பில் தமிழ் கட்சிகளின் அரங்க பிரதிநிதிகளாக தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், புளொட் தலைவர் டி.சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். பொதுச்செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG