அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 5 நவம்பர், 2010

‘கருணா, பிள்ளையான், கே.பி. மூலம் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கு அரசாங்கம் குறி'

ருணா, பிள்ளையான் மற்றும் கே.பி. ஆகியோரை முறையாக நிர்வகித்து அரசாங்கம் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கு குறிவைத்துள்ளது.
குறிப்பாக, கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் குறித்தும் சொத்து விபரங்கள் தொடர்பிலும் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு அரசாங்கம் கூடுதலாக சுதந்திரம் கொடுத்துள்ளது. அல்லது விசாரணைகளை நடத்த வில்லை என எவரும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை தேசிய நூலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் ஊடகச் செயலாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறுகையில் :
கடந்த யுத்த காலப்பகுதியில் பங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு அழிவுகளை ஏற்படுத்திய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திகாந்தன் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கும் தற்போது பாதுகாப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள குமரன் பத்மநாதனுக்கும் எல்லாவிதமான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் பதவிகளை கொடுத்து கௌரவித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக உண்மை நிலையை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். கருணாவும் பிள்ளையானும் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து பிரபாகரனையும் அவரது ஆயுதப்போராட்டத்தையும் அழிக்க உதவி செய்தார்கள். அதேபோன்று இலங்கை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட புலிகளால் சர்வதேச செயற்பாட்டாளர் குமரன் பத்மநாதன் தற்போது சர்வதேசத்தில் மறைந்துக் கொண்டுள்ள புலிகளை வேட்டையாடும் நடவடிக்கைக்கு அரசாங்கத்திற்கு உதவுகின்றார்.
இவ்வாறு அரசாங்கம் நாட்டை எதிர்கால அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்து திட்டமிட்டமுறையில் முன்னாள் புலி இயக்க உறுப்பினர்களை பயன்படுத்தி வருகின்றது. இன்று 11 ஆயிரம் புலி சந்தேக நபர்களுக்கு அரசாங்கம் புனர்வாழ்வு அளித்து வருகின்றது.
1987, 88 களில் ஜே.வி.பியின் போராட்டங்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதைப்போல் இவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்படும் என்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG