அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 26 நவம்பர், 2010

ஜனாதிபதியுடனான சந்திப்பு திருப்தியளிக்கவில்லை: சிவாஜிலிங்கம்

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமானது என்று கூற முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்  இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான 16 பேர் கொண்ட தமிழ் கட்சிகளின் அரங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நண்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இச்சந்திப்பு சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் தொடர்ந்து இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது தமிழ் மக்களின் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் என்பவை உள்ளடங்கிய 8 அம்சங்களை கொண்ட மகஜரொன்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதாக தமிழ் தேசிய விடுதலை முன்ணனியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.


  

0 கருத்துகள்:

BATTICALOA SONG