அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 9 நவம்பர், 2010

'வடக்கு கிழக்கு இணைப்புக்காக தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணையவில்லை'

"தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றினைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்ததே தவிர, மீண்டும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு சேரவில்லை" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைய வேண்டும் என்றால் கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாகெடுப்பு நடத்த வேண்டும். அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் கிழக்கு மாகாண மக்கள் அதற்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டார் என அவர் கூறினார்.
முன்னாள் தமிழ் தலைவர்கள் விட்ட தவறை விடுவதற்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தயாரில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

"வடக்கும் கிழக்கும் ஒரு மாகாணமாக இணையும் பட்சத்தில் யாழ்பாணத்தை சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக வருவார். இதனால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர் பதவிகளில் பாதிக்கப்படுவார்கள்" என முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.
அதேவேளை, "தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் யாருடனும் பேச்சு நடத்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தயார்" என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG