அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 28 நவம்பர், 2010

சிங்களவர்கள் குடியேறுவதற்கு ஏற்ப யாழ். தேசவழமைச் சட்டம் மாற்றப்பட வேண்டும்-ஐ.தே.க எம்.பி

யாழ்ப்பாணத்தில் வழக்கிலுள்ள தேசவழமைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.வரவு செலவுத் திட்டம் மீதான பிரேரணையின் மீது அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்
. தொடர்ந்து உரையாற்றியபோது அவர் மேலும் கூறியதாவது:
கொழும்பில் சகல இன மக்களும் ஒற்று மையாக வாழ்கின்றனர். இதேபோன்று யாழ்ப் பாணத்திலும் சகல இன மக்களும் வாழ வேண்டும். இதனால் சிங்கள மக்கள் அங்கு குடியேறுவதற்கு ஏற்ப தேச வழமைச் சட்டத் தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாகத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியதற்குப் பதிலளிக்கும் முகமா கவே நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஓர் இனவாதி யல்ல எனவும் அவர் இவ்விடயத்தை ஆராய் வார் எனவும் சுஜீவ சேனசிங்க எம்.பி. கூறி னார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG