பராக் ஒபாமாவும் அவரின் பாரியார் மிட்செல் ஒபாமாவும் மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் இன்று பிற்பகல் 12.50 இற்கு வந்திறங்கினர்.
அவர்களை, மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் அஷோக் சாவன், மத்திய சிறுபான்மையினர் விவகார இணை அமைச்சர் சல்மான் குர்ஷிட் ஆகியோர் வரவேற்றனர்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 10 பில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பராக் ஒபாமா இந்தியாவில் அறிவித்தார். 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளில் ஒன்றாக இந்தியா விளங்க முடியும் எனக் கூறிய ஒபாமா, இந்திய வர்த்தக முட்டுக்கட்டைகளை நீக்க வேண்டும் எனக் கோரினார். அதேவேளை, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் இரு தரப்பிற்கும் வெற்றி அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக