மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலையின் மாங்காடு பிரதேசத்தில் சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் 8 வயது சிறுவனொருவன் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த கிழக்கு மாகாண சபை அமைச்சரொருவரின் செயலாளரது கார் ஒன்று அப்பகுதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியொன்றுடன் மோதியதை அடுத்தே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் குறித்த துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பாட்டனும் பேரனுமே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் விபத்து குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 23 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக