அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

போரைதீவுபற்றில் யானை தாக்கி ஒருவர் பலி

ட்டக்களப்பு மாவட்ட படுவான்கரை பிரதேசத்தின் போரைதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் விவசாயி ஒருவர் யானை தாக்கி ஸ்தலத்திலேயே மரணமாகியுள்ளார்.

பாளையடிவட்டை, புதுமுன்மாரிசோலை 37ஆம் கொலினியைச் சேர்ந்த பெரியதம்பி என அழைக்கப்படும் 35 வயதுடைய தம்பிப்பிள்ளை உலகநாதன் என்பவரே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
அதிகாலை வயலில் வேலை செய்வதற்காக தனது வீட்டிலிருந்து சென்றுகொண்டிருந்தபோது வழியில் இடைமறித்த யானை தாக்கியதாலேயே இச்சம்பவம் நிகழ்ந்ததாக பிரதேச செயலாளர் தெரிவித்தார். வெள்ளாவெளி பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பிரதேசத்தில் அடிக்கடி யானைகளின் தாக்குதலில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG