அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 16 அக்டோபர், 2010

ஆண் தாதியர்களை பிரசவ அறைக்குள் அனுமதிக்கத்தேவையில்லை: மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வைத்தியசாலைகளின் பிரசவ அறைகளில் ஆண் தாதியர்களை அனுமதிப்பதற்கான அவசியம் இல்லையென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.
பெண்கள் சங்கடத்திற்குள்ளாவர் என்பதே இதற்குக் காரணம். அத்துடன் அவர்களுக்கு இதில் தீர்மானம் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தாதி உத்தியோகஸ்தர்களில் 95 சதவீதமானோர் பெண்கள். பெண் நோயாளிகளை ஆண் தாதியர் அணுகலாமா என்பது கேள்விக்குரியது. இவ்விடயத்தில் பெண் நோயாளிகளே தீர்மானம் மேற்கொள்ள இயலுமாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரசவ அறைகளில் ஆண் தாதியர்களையும் அனுமதிக்குமாறு கோரி குருநாகலில் தாதியர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இந்த கோரிக்கைக்கு எதிராக குருநாகல் வைத்தியசாலை மருத்துவர்களும் சிற்றூழியர்களும் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடுசெய்துள்ளதாகவும் மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG