சர்வாதிகாரிகளிடம் ஒருபோதும் மன்னிப்புக் கோரப் போவதில்லை என ஜனநாயகத் தேசியக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகா இன்று தெரிவித்தார்
.வௌ்ளைக் கொடி வழக்கு தொடர்பில் நீதிமன்றுக்கு இன்று அழைத்து வரப்பட்ட போதே அவர், நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த மக்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
"நாட்டின் சர்வாதிகாரிகளிடம் நான் எப்போதும் தலை குனியவும் மாட்டேன், மன்னிப்புக் கோரவும் மாட்டேன். வாழ்நாள் முழுவதும் சிறை வாசம் அனுபவிக்க நேரிட்டாலும் ஒருவருக்கும் அடிபணிந்து போக மாட்டேன்" என்றார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 12 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக