அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 7 அக்டோபர், 2010

காதல் ஜோடிகளை அச்சுறுத்தி கையடக்கத் தொலைபேசிகளை பறித்து வந்த பொலிஸார் இருவர் கைது

 ண்டி நகரில் காதல் ஜோடிகளை அச்சுறுத்தி அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை பறித்துச் சென்ற இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்
.இது போன்ற நான்கு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த கண்டி பொலிஸார், அங்கு கடமையாற்றும் பொலிஸ் இன்ஸ் பெக்டர் ஒருவரையும், சார்ஜன்ட் ஒருவரையும் இன்று கைது செய்துள்ளனர்.
கண்டியில் நடமாடும் காதல் ஜோடிகளை அச்சுறுத்தி அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை இன்ஸ்பெக்டர் ஒருவர் பறித்து வருவதாக நான்கு முறைபாடுகள் கிடைக்கப் பெற்றன.
இம்முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களைக் கைது செய்யுமாறு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்தன விசேட குற்றப் புலனாய்வு பிரிவுக்கு ஆலோசனை வழங்கிருந்தார்.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் இன்று காலை இன்ஸ்பெக்டர் ஒருவரையும் சார்ஜன் ஒருவரையும் கைது செய்து கண்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
குறித்த இருவரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG