அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

'சூரியனையோ சந்திரனையோ கேட்கவில்லை'

மிழ் மக்கள் ''சூரியனையோ, சந்திரனையோ'' கேட்கவில்லை, நடைமுறைச் சாத்தியமான விடயங்களையே கோருகின்றனர் என்று இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்
 தான் இன்று அந்த ஆணைக்குழுவுக்கு வழங்கிய சாட்சியம் குறித்து தமிழோசையிடம் பேசிய அவர், 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிங்கள தலைமைகளின் போக்கும், அதன் பின்னர் தமிழ் தரப்பினரின் மத்தியிலான இணக்கமின்மையுமே இனப்பிரச்சினை இழுபறிநிலையை எட்டியமைக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
பல மணி நேரம் ஆணைக்குழுவின் முன்னதாக சாட்சியமளித்த அவர், இலங்கையர் என்பதற்காக தமிழர் என்பதையோ அல்லது தமிழர் என்பதற்காக இலங்கையர் என்பதையோ விட்டுக்கொடுக்க தாம் தயாராக இல்லை என்றும் ஆணைக்குழுவிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அரசியலமைப்பில் தற்போது உள்ள விடயங்களை அமல்படுத்துவதனை ஒரு ஆரம்பமாகக் கொண்டு தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண அரசாங்கம் விளைய வேண்டும் என்றும் ஆணைக்குழுவின் முன்பாக தான் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தின் போது இலங்கை அரசாங்கம் மோதல்கள் அற்ற பகுதிகளுக்கு வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த போதிலும், விடுதலைப்புலிகள் அதற்கு அனுமதிக்கவில்லலை என்றும், அவர்களுக்கு ஆதரவான சக்திகளும், சர்வதேச சமூகமும் விடுதலைப்புலிகளுக்கு அந்த விடயத்தில் அழுத்தம் கொடுக்கத் தவறி விட்டன என்றும் குறிப்பிட்டார்..

0 கருத்துகள்:

BATTICALOA SONG