அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

மிகச்சிறிய துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றபட்டது

மிகச்சிறிய நவீனரக கையடக்கக் கைத்துப்பாக்கி ஒன்றை அலவத்துகொடை பொலிஸார் கண்டு பிடித்துள்ளதுடன் இது தொடர்பாக இருவரையும் கைது செய்துள்ளனர்
. இலங்கையில் எந்தவொரு அமைப்பும் பாவிக்காத சுமார் 3 - 4 அங்குல நீளத்தையுடைய இக்கைத்துப்பாக்கியை அலவத்துகொடைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அலவத்துகொடைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அக்குறணை துனுவில என்ற இடத்தில் ஒருவரைக் கைது செய்தபோது அவர் இடைத் தரகராகத் தொழிற்பட்டு கலகெதரையைச் சேர்ந்த ஒருவருக்கு அதை விற்பனை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
தற்போது சிறையில் இருக்கும் ஒருவர் கம்பஹா பகுதியிலுள்ள மற்றொருவர் மூலமே இவ்வியாபாரத்தை மேற்கொண்டதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

0 கருத்துகள்:

BATTICALOA SONG