அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்

ட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்
.ஆனால், அவர்கள் முறைக்கேட்டிலும் ஈடுபடவில்லை எனவும் பல்வேறு வணிக நிறுவனங்களுடனான விளம்பர ஒப்பந்தத்திற்காகவே இப்பணத்தைப் பெற்றதாகவும் அவ்வீரர்கள் தெரிவித்ததாக அவர்களின் சட்ட ஆலோசகர் டபாஸுல் ரிஸ்வி, பாகிஸ்தான் தொலைக்காட்சியொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மஸார் மஜீத் சூதாட்ட முகவர் என்பதை தான் அறிந்திருக்கவில்லை எனவும் மேற்படி வீரர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் குறித்த விளம்பர ஒப்பந்த ஆவணங்களையும் அதிகாரிகளிடம் காண்பித்ததாகவும் சட்டத்தரணி ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG