அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 9 செப்டம்பர், 2010

நடுவானில் செயலிழந்த விமானம்

ஷியாவின் 82 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த ஒரு விமானம் நடுவானில் செயலிழந்த நிலையில்,எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியமை ஒரு அதிசயம் என வான் போக்குவரத்து வல்லுநர்கள் வர்ணித்துள்ளனர்
.மாஸ்கோவுக்கு பறந்து கொண்டிருந்த அந்த டூபலோவ் ரக பயணிகள் விமானம் நடுவானில் பத்தாயிரம் மீட்டர்களுக்கும் அதிகமான உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது செயலிழந்து போனது.
அந்த விமானத்தின் எரிபொருள் பம்புகள், வானொலி மற்றும் அது சென்றடைய வேண்டிய இடத்துக்கான பாதை மற்றும் பறக்கும் உயரம் போன்ற முக்கிய தகவல்களை காட்டும் நேவிகேஷன் கருவி ஆகியவை நடுவானில் செயலிழந்தன.
நடுவானில் பழுதடைந்த அந்த ஜெட் விமானத்தை, அதன் ஓட்டுநர் தாழ்வான உயரத்துக்கு எடுத்துச் சென்று, அப்பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு இராணுவ விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
இவ்வளவு அபாயகரமான நிலையிலும் பாதுகாப்பாகத் தரையிறங்கிய அந்த விமானம், ஓடுபாதையை விட்டு இருநூறு மீட்டர் தூரமே தள்ளிச் சென்று நின்றது.
அந்த விமானத்தில் இருந்த அனைவரும் சிறுகாயம் கூட இல்லாமல் விமானத்திலிருந்து வெளியேறினர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG