அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 6 செப்டம்பர், 2010

தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்பதன் மூலம் மொழிப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இன்று (4) மாலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் கல்வி கற்று நற்பிரஜைகளாக ஆக வேண்டும் என்பதுடன் நாம் சார்ந்த சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக திகழ வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழ்ப் பகுதிகளிலிருந்து தென்பகுதி பல்கலைக்கழகத்திற்கு வந்திருக்கும் நீங்கள் அனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தை உரிய வகையில் பயன்படுத்தி சகோதர மொழியான சிங்கள மொழியையும் நன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

என்னைப் பொருத்த வரையில் இலங்கையர்களாகிய நாங்கள் தமிழர்களாக இருப்பின் சிங்கள மொழியையும் சிங்களவர்களாக இருப்பின் தமிழ் மொழியையும் கற்றுக் கொள்வது அவசியம். இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்றால் இலங்கையில் மொழிப் பிரச்சினை என்பது இருக்காது என்றும் அமைச்சர் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.







0 கருத்துகள்:

BATTICALOA SONG