அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 8 செப்டம்பர், 2010

ஹந்துன்னெத்தி எம்.பி.யின் அலுவலகம் நள்ளிரவில் பொலிஸாரால் திடீர் சோதனை

னநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தியின் மஹரகம அலுவலகத்தினை நேற்று நள்ளிரவு திடீர் சோதனைக்கு உட்படுத்தியுள்ள பொலிஸார், அங்கிருந்த சுவரொட்டிகள் பலவற்றையும் பலவந்தமாக எடுத்துச் சென்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்தது.

மஹரகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்று கூறிய சிலரே சீருடையில் வந்து, இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக சுனில் ஹந்துன்னெத்தி எம்.பி. தெரிவித்தார்.
இதன்போது குறித்த அலுவலகத்திலிருந்த இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போதும் தனது முயற்சியினால் அது தடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும் குறித்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சுவரொட்டிகள் பலவும் பொலிஸாரால் பலவந்தமான முறையில் எடுத்துச் செல்லப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் கூறினார்.
இதுகுறித்து எமது இணையதளம் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடியிடம் வினவிய போது, இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லையென தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG