அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தமிழ் மக்களின் அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமைகள் குறித்து இந்தியா உதவ வேண்டும்! இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் அவர்களிடம் தமிழ் கட்சிகளின் அரங்கம் நேரடியாக சந்தித்து பேச்சு!

லங்கைக்கான உத்தியோகப்பூர்வ நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் அவர்களை இன்றைய தினம் (2) தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியிருந்தது
.இன்று காலை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடந்த இச்சந்திப்பின்போது தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகள் மத்தியில் உரை நிகழ்த்திய இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் அவர்கள் கடந்த கால சூழ்நிலையில் இருந்து சமகால சூழ்நிலை என்பது மாறுபட்டது என்றும் சமகால சூழலை உணர்ந்து அதற்கேற்றவாறு ஜதார்த்தபூர்வமாக சிந்தித்து செயற்படுவதே பயனுள்ளதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்ததோடு இவ்வாறு அனைத்துக் கட்சிகளும் ஐக்கியப்பட்டு செயற்படும் போது பெறவேண்டியவற்றை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் ஒற்றுமை முயற்சி குறித்தும் பாராட்டி பேசியிருந்தார்.

இதே வேளை அங்கு கருத்துத் தெரிவித்திருந்த தமிழ்க் கட்சிகளின் அரங்க பிரதிநிதிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான கோரிக்கையினை தாம் இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்து வருவதாகவும், அதை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இந்தியா அக்கறையோடு ஈடுபட்டு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதே வேளை கடந்த (14.08.2010) அன்று மட்டக்களப்பில் நடந்த தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் தற்போது அங்கம் வகிக்கும் 9 தமிழ்க் கட்சிகளும் எடுத்த தீர்மானங்களையும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகள் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் அவர்களிடம் எடுத்து விளக்கியிருந்தனர்.

1. அர்த்தமுள்ள மீள்குடியேற்றம்

2. உட்கட்டமைப்புடன் கூடிய மீள்கட்டுமானம்

3. உயர் பாதுகாப்பு வலயங்களைப் படிப்படியாக அகற்றல்

4. மக்களின் வாழ்விடங்களில் அமைக்கப்பட்டுவரும் இராணுவக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தல்

5. முழுமையான சிவில் நிர்வாகத்தினை ஏற்படுத்துதல்

6. யுத்;தத்தினால் உடமைகளை உறவுகளை அங்கங்களை இழந்த மக்களுக்கு நட்ட ஈடுகளைப் பெற்றுக்கொடுத்தல்

7. வடக்கு கிழக்கு உட்பட தமிழ் பேசும் பகுதிகளில் இனப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தளர்த்துதல்

8. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைத் தளர்த்துதல்

9. மீள் குடியேற்றத்தை வெளிப்படையாகச் செய்வதுடன் அதற்கு மக்கள் பிரதிநிதிகள் சர்வதேச உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளல்.

10. தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகள் இறுதி யுத்த நடவடிக்கையின்போது சரணடைந்த கைது செய்யப்பட்ட போராளிகளின் விபரங்களை வெளிப்படுத்துவதுடன் அவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தல்.

11. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு மாகாணசபைக்கென பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற அரசியல் அமைப்பில் உள்ள 13வது அரசியல் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துதல் ஆரோக்கியமான முன் முயற்சியாக அமையும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த விடயங்களே மட்டக்களப்பில் நடந்த தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் எடுத்த தீர்மானங்கள் என்றும் இவைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரியே தாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாக தெரிவித்து அதற்கு இந்தியாவின் பங்களிப்பையும் கோரியிருந்தனர்.

இச்சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ராஜ்குமார் ராஜமாணிக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா சார்பில் சிறிதரன் புளொட் சார்பில் சதானந்தம் ஈரோஸ் சார்பில் பிரபாகரன் நீதிராஜஸ்ரீ ஈழ எதிலியர் மறுவாழ்வுக் கழக சார்பில் சந்திரகாசன் பேரின்பநாயகம் த.தே.கூ.வி.மு சார்பாக சிவாஜிலிங்கம் சிறிரெலோ சார்பில் உயராசா சுரேந்திரன் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:

BATTICALOA SONG