அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 2 செப்டம்பர், 2010

எமது மக்கள் சுபீட்சமான சுதந்திரமான வாழ்வுக்கு வழிகோல அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

டைமுறைக்குச் சாத்தியமான 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி அதன் மூலமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை காணமுடியுமென நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களுடனான இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ் மாவட்டத்திலுள்ள 15 உதவி அரச அதிபர் பிரிவுகளில் 5 முதல் 50 வரையான அங்கத்தவர்களை இணைத்து அதன் மூலம் சமூக சேவை அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறாக சமூக அபிவிருத்திக் குழுக்களை ஒழுங்கமைப்பதன் ஊடாக அந்தந்த பிரதேச மக்களினது தேவைகளை இலகுவாக கண்டறிந்து அவற்றை சீர் செய்ய முடியும்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்பதற்காகவே தமிழ்க் கட்சியின் அரங்கம் உருவாக்கப்பட்ட போதிலும் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

நடைமுறைக்குச் சாத்தியமான 13வது அரசியல் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி அதன் மூலமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை காண முடியும் என நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றோம்.

அதற்கேற்ப தற்போது நல்லதொரு சூழ்நிலை உருவாகியுள்ளது இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் எமது மக்கள் சுபீட்சமான சுதந்திரமான வாழ்வுக்கு வழிகோல அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறு;பபினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் உள்ளிட்ட ஈ.பி.டி.பி. பிரதேச பொறுப்பார்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.






0 கருத்துகள்:

BATTICALOA SONG