அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து கொண்டார்

கோவில் திருவிழாவிற்கெல்லாம் தாய்த்திருவிழாவாம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த திருவிழா இன்றையதினம் (15) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றையதினம் மாலை பாரம்பரிய வழக்கத்தின்படி செங்குந்த மரபினரால் அலங்கார தேரில் எடுத்துவரப்பட்ட கொடிச்சீலையானது கந்தனுக்கு அரோகரா என ஆயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர கோஷம் எழுப்பிய நிலையில் இன்றையதினம் காலை பத்து மணிக்கு பிரதம சிவாச்சாரியாரினால் ஏற்றப்பட்டது.
இன்றுகாலை நல்லூர் தேவஸ்தானத்திற்கு நேரடியாக விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கொடியேற்ற நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இணைந்து கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற அன்னதான நிகழ்விலும் அமைச்சரவர்கள் பங்குகொண்டார். மேலும் தேவஸ்தான சுற்றாடலில் பெருவிழா ஏற்பாடுகளை அவர் நேரடியாக பார்வையிட்டதுடன் இலட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதை நேரில் கண்டறிந்தார். இச்சமயம் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் மாநகரசபை உயரதிகாரிகளும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் தேவஸ்தான சுற்றாடலில் சுகாதாரம் குடிநீர் மருத்துவம் பாதணி பாதுகாப்பு முதலுதவி மற்றும் ஏனைய தேவைகள் சேவைகள் அனைத்தும் சீராக இடம்பெறுவதுடன் சுமார் நாற்பது கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகத்திற்கென நான்கு பவுஸர்கள் ஆயத்தநிலையில் இருப்பதுடன் ஆலயச்சுற்றாடலில் நீர்விசிறும் நடவடிக்கைகளும் இடம்பெற்றவண்ணமுள்ளன. செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் ஆகியவற்றின் தொண்டர்கள் முதலுதவிக்கான ஏற்பாடுகளில் தயார் நிலையில் இருப்பதுடன் முதலுதவி சிகிச்சைக்கு மேலதிகமாக அவசர தேவையின் நிமித்தம் தேவை உடைய நோயாளரை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் முகமாக அம்புலன்ஸ் வாகன ஒழுங்கும் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.













0 கருத்துகள்:

BATTICALOA SONG