அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 11 ஆகஸ்ட், 2010

பிரபாகரனின் கையெழுத்துடன் நிதி சேகரிக்கப்படுகிறது: பேர்னார்ட் குணதிலக்க

மிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறி புலம்பெயர்ந்த தமிழர்களிடம் புலிகள் சார்புக் குழுக்கள் நிதி சேகரிப்பதாக அரசாங்க சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் பேர்னார்ட் குணதிலக்க தெரிவித்துள்ளார்
.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் கையெழுத்திட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி மேற்படி குழுக்கள் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும் பேர்னார்ட் குணதிலக்க கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, தனது முதலாவது பகிரங்க விசாரணையை இன்று ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG