முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான பாதுகாப்பே மேர்வின் சில்வாவுக்கு வழங்கப்படும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் ஹுலுகல்ல இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்
.அதேவேளை, மேர்வின் சில்வாவுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனங்களும் குறைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, களினியில் இன்று பிற்பகல் தனது ஆதரவாளர்களை சந்தித்த மேர்வின் சில்வா, தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை வாபஸ் பெறுவதற்கு சில 'நாய்கள்' அழுத்தம் கொடுப்பதாக கூறியமை குறிப்பிடத்தக்கது. அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் தான் தனிப்பட்ட பாதுகாப்பு ஊழியர்களை பயன்படுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 12 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக